வேதாரம்பம்

வேதாரம்பம்

காலப்பிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தையின் புண்ணிய கர்மாக்கள்
இதற்குமேல் உயர்வான வேதாரம்பம் சொல்லப்போகிறேன் வேதாரம்பம் செய்வதற்கு திருவோணம் புனர்பூசம் பூசம் மிருகசீர்ஷம் அவிட்டம் ஸ்வாதி சதயம் அனுஷம் திருவாதிரை ஹஸ்தம் சித்திரை இந்த நக்ஷத்திரங்கள் உயர்வானவை அச்வினீ ரோகிணி ரேவதி உத்தரம் உத்தராடம் உத்திரட்டாதி இந்த நக்ஷத்திரங்கள் மத்யமம் மற்ற நக்ஷத்திரங்கள் வேதாரம்ப விஷயத்தில் விலக்கத் தக்கவை சிலர் அச்வினி நக்ஷத்திரத்தை உத்தம்மாகச் சொல்லுகிறார்கள் வேதாரம்பத்திற்கு திரயோதசியும் ஸ்பதமியும் மத்யமம் அஷ்டமீ, பெளர்ணமீ, அமாவாஸ்யை, பிரதமை, துவாதசி, இவைகளும் ரிக்தையும் அதம்ம் விலக்கத்தக்கவை மற்ற திதிகள் த்விதீயை, பஞ்சமி,ஷ்ஷ்டி, நவமீ, தசமி, ஏகாதசி உத்தமம்.

Read more

மந்திர ஸ்வீகாரம்

மந்திர ஸ்வீகாரம்

காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தையின் புண்ணிய கர்மாக்கள்

மந்திர ஸ்வீகாரம்
இதற்குமேல் இப்பொழுது மந்த்ரங்களை கிரஹித்துக் கொள்வதற்கான காலம் பற்றிக் கூறப்படுகிறது. சைத்ரமாஸத்தில் மந்த்ர உபதேசம் பெற (ஆரம்பம் செய்ய) பலவித துக்கத்தையளிக்கும். வைசாகத்தில் மிகுந்த உயர்ந்த பொருள் லாபம், ஜ்யேஷ்ட மாஸத்தில் மரணத்தினையளிக்கும்.

Read more

உபாகர்மா

உபாகர்மா

காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

உபாகர்மா
ஸந்தர்பானுஸாரமாக உபாகர்ம்ம் பற்றிக் கூறப்படுகிறது பொதுவிதியாக யஜூர்வேத்தினர்-சிராவண பெளர்ணமியிலும் ருக்வேத்திதினர்-சிராவணமாத்தில் சிரவண நக்ஷத்திரத்திலும் ஸாமவேத்த்தினர்-சூரியன் ஸிம்ஹராசியில் இருக்க ஹஸ்த நக்ஷத்ரம் கூடிய பஞ்சமி திதியிலும்-உபாகர்ம்ம் செய்தல்வேண்டும் ஸூர்ய-சந்த்ராதி கிரஹண தோஷமும் இல்லாதிருக்க வேண்டும் என்கிற நியதி இல்லை சூரியன் சிம்மத்தில் இல்லாவிட்டாலும்கூட சிராவண பெளர்ணமியிலும் ப்ரோஷ்டபத பாத்ரபத பெளர்ணமியிலும் உபாகர்மம் செய்யலாம்

Read more

வித்யாரம்பம்

வித்யாரம்பம்

காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தையின் புண்ணிய  கர்மாக்கள்

வித்யாரம்பம்

இதற்குமேல் வித்யாரம்பம் என்ற உயர்வானவிஷயம் பற்றிக் கூறப்போகிறேன்.ருக் யஜீஸ்-ஸாம அதர்வா எனும் நான்கு வேதங்களும் சிக்ஷ வியாகரணம் ச்சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்ப்பம் எனும் வேதங்களின் 6 அங்கங்களும் மீமாம்ஸை நியாயம் வைசேஷிகம் புராணம் இதிகாஸம் ஆக இந்த பதினான்கும் வித்யைகள் எனப்படும் ஆயுர்வேதம் தனுர்வேதம் காந்தர்வ்வேதம் அர்த்த சாஸ்திரம் இவைகள் உபவித்யைகள் எனப்படும்

Read more

உபநயனம்

உபநயனம்

காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

உபநயனம்
இனி உபநயனம் பற்றிக் கூறுகிறேன். அந்தணர்களுக்கு 5வது வயதில் இதைச் செய்யவேண்டும். அதற்கு வசதிப்படாவிடில் கர்பம் முதல் அல்லது பிறந்தது முதல் எட்டாவது வயதில் செய்ய வேண்டும். ஐந்தாவது வயதில் செய்தால் அறிவு வளர்ச்சி பெறலாம். ஆறாவது வயதில் செய்தால் ஞானிகளின் நிலையை-நித்ய-நிரதிசய ஸத்-சித் ஆனந்த வடிவான பரமாத்மானுபூதியை ஏற்படுத்தும் உன்னத ப்ரம்மதத்வத்தை அடையலாம் என சுக்ராசாரியார் கூறுகிறார்.

Read more

அக்ஷர ஆரம்பம்

அக்ஷர ஆரம்பம்

காலபிரகாசிகையில் கூறப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

அக்ஷர ஆரம்பம்
பிறந்த குழந்தைக்கு முதன்முதல் எழுத்தறிவு புகட்டுவதற்கு சுபமானதொரு நாள் தேர்வு செய்யப்படவேண்டும் அதுபற்றிக் கூறுகிறேன். குழந்தை பிறந்து 5வது வயது வந்தவுடன் உத்தராயணத்தில் எழுத்தறிவு புகட்டும் ‘அக்ஷராரம்பம்’ எனும் சடங்கு செய்யப்படவேண்டும். ஆனால் மாசி மாதம் விலக்கப்படவேண்டும். உபநயனத்திற்கு முன்பாக அக்ஷராப்யாசம் ஆரம்பிக்கப்படவேண்டும். குழந்தை மேற்கு முகமாக இருந்து குருவினிடமிருந்து கல்வியைப் பெறவேண்டும்.

Read more

முதலாம் ஆண்டு நிறைவு

முதலாம் ஆண்டு நிறைவு

காலபிரகாசிகையில் கூறப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

முதலாம் ஆண்டு நிறைவு
ஸௌரமான (சித்திரை வைகாசி என்று மாதங்களைக் கணக்கிடும் ஆண்டு ஸௌரம் எனப்படும்) முறையில் குழந்தை பிறந்து ஒருவருடம் நிறைவுற்றதும் ஜன்ம நக்ஷத்திரம் கூடும் நாளில் குழந்தையை நதியில் ஸ்நானம் செய்வித்து நல்லநேரத்தில் வசதிக்குத் தக்கவாறு இடையில் தங்கத்தாலான அரைஞாண் கட்டி புதுப்பட்டாடை அணிவிக்க வேண்டும் .

Read more

அன்னப்பிராசனம் (உணவூட்டுதல்)

அன்னப்பிராசனம் (உணவூட்டுதல்)

காலப்பிரகாசிகையில் கூறப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

                                                                            அன்னப்பிராசனம்
குழந்தையின் உடல் வளர்ச்சிக்குக் காரணமான முதல் உணவு ஊட்டுதல் பற்றிக் கூறுகிறேன்.. ஸௌரமான ரீதியில் குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலே அது சௌகரியப்படவில்லையாகில் 8வது, 10வது, 12வது மாதத்தில் முதல் உணவு ஊட்டலாம்.

Read more

காது குத்துதல்

காது குத்துதல்

காலப்பிரகாசிகையில் கூறப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

காது குத்துதல்

இதற்குமேல் குழந்தைகளுக்குக் காது குத்துதல் எனும் சுபகார்யம் பற்றிக் கூறுகிறேன்.குழந்தை பிறந்த 12வது 16வது நாளிலோ 6,7,8 அல்லது 10வது மாதத்திலோ குழந்தைகளுக்குக் காதுகுத்தும் வைபவத்தைச் செய்யவேண்டும், நக்ஷத்ர ஸந்தியில் செய்யலாகாது.

Read more

உபநிஷ்க்ராமணம்

உபநிஷ்க்ராமணம்

காலப்பிரகாசிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளின் புண்ணிய கர்மாக்கள்

உபநிஷ்க்ராமணம்

பிறந்த வீட்டிலிருந்து வெளியில் கொண்டுபோதல்
நிஷ்க்ராமணம் என்பது முதன்முதலாக பிறந்த வீட்டிலிருந்து வெளியில் கொண்டுசெல்லும் சமயம் தெய்வானுக்ரஹம் அக்குழந்தைக்குக் கிட்டவேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் சடங்கு குழந்தைபிறந்த 3வது மாதத்தில் குழந்தைக்குச் சூரியனை காண்பித்தல் வேண்டும் அப்படிச் செய்வது குழந்தையின் ஆயுள் விருத்திக்குக் காரணமாகும் நான்காவது ஸாவனமாதத்தில் சந்திரன் பசுமாடு முதலானவற்றைச் செய்யவேண்டும் Read more

Social Media Integration Powered by Acurax Wordpress Theme Designers
Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On Google PlusVisit Us On YoutubeVisit Us On Linkedin
Web Design BangladeshBangladesh Online Market