ஸ்ரீ சனி பகவானால் பெரும் நன்மைகள்

ஸ்ரீ சனி பகவானால் பெரும் நன்மைகள்

ஓம் சரவண பவ!!!
வணக்கம் சாஸ்திர அபிமானிகளே….. ஒருவர், ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களில் #ஸ்ரீ சனி பகவானால் ஏற்படும் நன்மைகளை சுட்டிக்காட்டுவதே இப்பதிவின் நோக்கம். Read more

மூலம் நட்சதிர பரிகாரம்

மூலம் நட்சதிர பரிகாரம்

ஓம் சரவண பவ!!!

வணக்கம் நண்பர்களே!!
நாம் திருமணம் பொருத்தம் பார்க்கும் போது என்னதான் நட்சதிர தோஸங்களுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்தாலும், சில விசயங்கள் மக்கள் மனதிலும்,(ரத்தத்தில்) ஊறிவிட்டது என்பது கண்கூடு.
எவ்வாறு எனில் #மூலம் நட்சதிரம் மாமனாருக்கு ஆகாது என்றும், #ஆயில்யம் நட்சதிரம் மாமியாருக்கு ஆகாது என்றும், #விசாகம் நட்சதிரம் மைத்துனருக்கு ஆகாது என்றும், #கேட்டையில் பிறந்தவள் கோட்டை அழிப்பவள் என்னும் ஜோதிடர்களிடமும், மக்களின் பேச்சு வழக்கிலும் Read more

சொந்த ஊரை விட்டு பொழப்புக்காக வெளியூர் செல்ல!!

சொந்த ஊரை விட்டு பொழப்புக்காக வெளியூர் செல்ல!!

ஓம் சரவணபவ…
வணக்கம் நண்பர்களே!!

ஒரு ஜாதகரோ,ஜாதகரின் குடும்பமோ காலத்தின் சூழ்நிலை காரணமாக (உத்தியோகம், தொழில்,அதவது வேலை)வெளியூரோ,வெளிநாடோ செல்ல வேண்டி இருப்பின் அந்த ஜாதகர்,அல்லது அந்த குடும்ப தலைவரின் ஜென்ம நட்சத்திர படியோ அல்லது நாம நட்சதிரப்படியோ இதில் எதாவது ஒன்றுபடி நர சக்கரம் அமைத்து அதன் பலனையும் தெரிந்து கொண்டு செயல்படுவது சிறப்பு, நட்சதிரம் தெரியாதவர்களே நாமநட்சதிரபடி பார்த்துக்கொள்க. Read more

#உபாசனா தெய்வம்

#உபாசனா தெய்வம்

ஓம் சரவண பவ!!

வணக்கம் நண்பர்களே!!
உபாசனா தெய்வம் என்பது நமக்கு வழிகாட்டும் அதிஅற்புத ஆற்றல் பெற்ற செய்வம் ஆகும், குல தெய்வத்திற்க்கு அடுத்த இடம் பிடிப்பதில் உபாசனா தெய்வத்திற்க்கே முக்கிய பங்குண்டு, இத்தெய்வங்களை பற்றிக்கொண்டாலே, வீடு,பேரு,புகழ் பெற தடையிருக்காது என்பது உறுதி. Read more

ஜாதகத்தில் ரோகஸ்தானம்

ஓம் சரவண பவ!!
வணக்கம் நண்பர்களே!!!
லக்னாதிபதியும்,ரோகாதிபதியும், இயற்க்கை பாபர்களான சூரியன்,சந்திரன்,செவ்வாய், சனி,ராகு போன்றோர்களுடன் கூட என்ன விதமான ரோகம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
லக்ன ரோகாதிபதி சூரியனுடன் சம்மந்தப்பட கடுமையான காய்ச்சலாலும், லக்ன ரோகாதிபதியுடன் சந்திரன் சம்மந்தம் பெற உடல் காயம் மற்றும் கொப்பளங்கள்லும், லக்ன ரோகாதிபதி செவ்வாயுடன் சம்மந்தம் பெற ஆயுதத்தாலும், லக்ன ரோகாதிபதியுடன் சனி கூட நீரினாலுல், லக்ன ரோகாதிபதியுடன் ராகு சம்மந்தம் பெற விச சந்துக்களாலும் #கெண்டம் ஏற்படும் எனவும், லக்னம்,மற்றும் சுக ஸ்தானதிபதி அஷ்டம ஸ்தாதிபதியுடனோ,அல்லது ரோகாதிபதியுடனோ கூட அஜீரத்தால் ரோகம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம் இதற்க்கான #ஆதாரப்பாடல்

#காணவே_ரோகாதி_லக்கினாதிக்
#கதிரவனுங்_கூடல்சுர_கண்டமென்பாய்
#பூணவே_சசிகூடில்_சகலகாயம்
#புகலுவாய்_சேய்கூடி_லாயுததுன்பம்
#நாணவே_சனிடில்_நீர்விரண்லம்
#நாடியே_ராகுகூடில்_பாம்பால்பீடை
#தோணவே_சுபத்தாதி_லக்கினாதி
#தொடர்ந்தா_ரெட்டேறஜீ_ரணத்தாற்_கண்டம்.

நன்றி நண்பர்களே!!
என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ மகேஸ்வரன் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
தொடர்புக்கு:8122156377

திருமணத்தில் சுக்கிரன்

திருமணத்தில் சுக்கிரன்

ஓம் சரவண பவ!!

திருமணத்தில் சுக்கிரனின்

குரு பலம்,பார்வை இல்லாத போதும் திருமணத்தை நடத்திக் காட்டும் சுக்கிரன்.

குருபகவானின் கருணை இருந்தால் திருமணம் நடைபெரும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் குரு நல்ல இடத்தில் இருந்தும் சிலருக்கு திருமணம் வாய்ப்பதிலையே ஏன்?
குரு மட்டும் நல்ல இடங்களில் இருந்தால் மட்டும் போதாது சுக்கிர பகவான் கருணையும் வேண்டும்.
ஒருவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்கும் போது,லக்னத்தில் இருந்தும்,ராசியில் இருந்தும்,சுக்கிரனிடமிருந்தும் பார்க்க வேண்டும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் சுக்கிரனை வைத்து ஒருசிலர் தோஷம் பார்ப்பது இல்லை,குரு சாதகமாக இருந்தும் திருமணம் நடைபெற தாமதம் ஆகும் எனில் சுக்கிரனையும் கருத்தில் கொள்க.
சுக்கிரன் அனுகூலமாக இருந்தால்,குரு லக்ன,ராசிக்கும் மறைவுஸ்தானத்தில் இருந்தாலும் பாவகிரகள்களுடன் சேர்ந்திருந்தாலும்,சுக்கிரன் திருமணத்தை செய்துவைப்பார்.
குரு 5,7,9,11 இருந்தும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை எனில் கவலைபட தேவையில்லை, சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தாலும்,நல்ல இடத்திற்கு வந்தாலும் நிச்சயமாக சுக்கிரன் திருமணத்தை நடத்திவைப்பார்.
என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஜோதிடத்தில் குழந்தை பிறப்பை தடுக்க!

ஜோதிடத்தில் குழந்தை பிறப்பை தடுக்க!

அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்…
குழந்தை பேற்ற தள்ளி வைக்கும் கிரக அமைப்பு.

பெண்களுக்கு மாதந்தோறும் சந்திரன் 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது செவ்வாய் பார்ப்பதாலும் சேர்வதாலும் மாதவிடாய் ஏற்படும் என்பது சாஸ்திர விதி,
சந்திரன் 3,6,10,11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது வீரியமுள்ள ஆண்கிரகத்தால் பார்க்கபட்டால் கர்பம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்,எனவே குடும்ப பெண்களின் ஜாதகத்தை நல்ல முறையில் கணித்து கிரக நிலையை கவனிக்க குழந்தை பேற்ற தடுக்கவோ (ஏற்படுத்தவோ) முடியும்.என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் நல்வழி.

ஆதித்ய ஹ்ருதயம்(சூரிய பகவான் தியானம்)

ஆதித்ய ஹ்ருதயம்(சூரிய பகவான் தியானம்)

ஓம் சரவண பவ!!

வணக்கம் ஜோதிட சொந்தங்களே!!

“பிதுர் தோஸம், புத்திர தோஸம்,சாப தோஸம் என சூரியனால் ஏற்படும் தோஸங்களுக்கு, அகத்தியாரால் உபதேசிக்கப்பட்ட “ஆதித்ய ஹ்ருதயம” தியான சுலோகம் சிறந்த பரிகாரம் ஆகும்.

ஜயதி ஜயதி ஸீர்ய: ஸப் லோகைக தீப:
கிரணம் ருதித தாப:சர்வதுக்கஸ்ய ஹர்தா|

அருண கிருண கம்யஸ் சாதிராத்திய மூர்த்தி:
பரம பரம திவ்ய: பாஸ்கரஸ்தம் நமாமி||

ததோ யுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸ்முபஸ்திதம்|

தைவதைஸ்ச்ச ஸமாகம்ய த்ரஷ்டு மப்யாகதோ ரணம்
உபாகம்யா ப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவாந் ரிஷி:

ராம ராம மஹாபாஹோ சருணு குஹ்யம் ஸநாதநம்
யேந சர்வாநரீன் வத்ஸ ஸாமரே விஜயிஷ்யஸி

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ருவிநா சநம்
ஜயாவஹம் ஜபேத்நித்யம் அ௯ப்யம் பரமம் சிவம்

ஸர்வமங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தா சோக ப்ரசமநம் ஆயுர்வர்த்தன முத்தமம்

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸீர நமஸ்க்ருதம்
பூஜயஸ்ய விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேஸ்வரம்

ஸர்தேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மி பாவந:
ஏஷ தேவா ஸீரகணாய் லோகாந் பரதி கபஸ்திபி:

ஏஷ ப்ரம்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தந்ந;காலோ யமஸ் ஸோமா ஹ்யபாம்பதி;

பிதரோ வஸவஸ் ஸாத்ய ஹ்பஸ்விநௌ ம்ருதோமநு;
வாயுர் வஹ்நி;ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர;

ஆதித்ய; ஸவிதா சூர்ய; சுக; பூஷா கபஸ்தி மாந்
ஸ்வர்ண ஸத்ரு ஸோபாநு; ஹிரண்யரேதா திவாகர;

ஹரிதச்வ; சஹஸ்ரார்ச்சி; ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந: சம்பு; த்வஷ்டா மார்த்தாண்ட அம்ஸீமாந்

ஹிரண்ய கர்ப்ப; சிசிர தபநோ பாஸ்கரோ ரவி;
அக்நி கர்ப்போ திதே; புத்ர ; ஸங்க; ஸினிர நாஸந;

வ்யோமநாதஸ் தமோபேதி ரிக்யஜீஸ் ஸாமபாரக;
கநவ்ருஷ்டிரயாம் மித்ர ; விந்த்யவிதி ப்லவங்கம;

ஆதபீமண்டலீ ப்ருத்யூ; பிங்கலஸ் ஸர்வதபா ந;
கவிர் விஸ்வோ மஹாதேஜோ ரக்தஸ் ஸர்வ பவோத்பவ

நட்சத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஸ்வ பாவந;
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

நம; பூர்வாய கிரயே பஸ்சிமா யாத்ரயே நம;
ஜ்யோதிர் கணாநாம்பதயே தினாதிபதயே நம;

ஜயாய ஜயபதராய ஹர்யஸ்வாய நமோ நம;
நமோ நம; ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம;

நம; உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம;
நம; பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம;

ப்ரம்மேஸா நாச்யுதேஸயா ஸீர்யா யாதித்ய வர்ச்சஸே
லாஸ்வதே ஸ்ர்வபாஷாய ரௌத்ராய வபுஷே நம;

தமோக்நாய ஹீமக்நாய சத்ருக் நாயா மிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம;

தப்தாசமீ கராபாய வஹ்னவே விஸ்வகர்மணே
நமஸ் தமோ பிநிக்நாய ருசயே லோக ஸாஷிணே

நாஸத்யேஷ வைபூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரப;
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்த்திபி:

ஏஷ ஸீப்தேழு ஜாகர்த்தி பூதேஷீ பரிநிஷ்டித;
ஏஷ ஏவாக்நி ஹோத்ரம்ச பலம் சைவாக்நிஹே த்ரிணாம்

வேதாஸ்ச க்ருதவஸ்சைவ க்ரதூனாம் பலமேவச
யாநி கருத்யாநி லோககேஷீ ஸர்வ ஏஷரவி; ப்ரபு

ஏநமாபத்ஸீ க்ருச்ச்ரேஷீ காந்தாரஷீ பயேஷீச
கீர்த்தயந் புருஷ; கஸ்சித் நாவஸீததி ராகவ

பூஜயஸ்வைந மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷீ விஜயிஷ்யஸி

அஸ்மிந்௯ணே மஹாபஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவ முக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா : நஷ்டஸோகோ பவத்ததா
தாராயாமாஸ ஸீப்ரீதோ ராகவ: ப்ரயத்தாத்மவாந்

ஆதித்யம் ப்ரேஷ்ய ஜப்த்வாது ப்ரம் ஹர்ஷ மவாப்தவாந்
த்ரிராசாச்ய ஸீசிர் பூத்வா தநூராதாய வீர்யவாந்

ராவணம் ப்ரேஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அதிரவீரவதந் நிரீ௯யராமம்
முதிதமதா; ப்ரமம் ப்ரஹருஷ்யபாண;|
நிஸிசரபதி ஸம்௯யம் விதித்வா
ஸீரசண மத்யகதோ வசஸ்த்வரேதி||

(ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம் சம்பூர்ணம்)
நன்றி
என்றும் ஆன்மீக ஜோதிட பணியில்
ஸ்ரீ மகேஸ்வரன் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
ஜெ.ஊத்துப்பட்டி ,
திண்டுக்கல் 624206.
தொடர்புக்கு :8122156377

கோவில்,ஜோதிடம் மின்சாரம் இல்லாத பல்புகள்.

கோவில்,ஜோதிடம் மின்சாரம் இல்லாத பல்புகள்.

prism

Shiva-005

 

 

அன்புள்ளங்கொண்ட என் ஜோதிட குடும்பத்தார்களுக்கு,

உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையின் இரண்டாவது ஜோதிட கருத்தரங்கம் கோவையில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது அதில் கலந்துகொண்ட அனைத்து என் ஜோதிட குடும்பத்தாருக்கும் என் வாழ்துகளும் நன்றிகழும், அதில் ஒரு அன்பான ஜோதிட சகோதரர் ஒரு கேள்வியே எழுப்பினார் அதாவது புண்ணிய ஸ்தமாக கருதும் கோவிலுக்கு சொல்வதன் மூலம் நம் பாவகுவியல்கள் தீரும் என்று ஒரு பரிகாரம் இருந்தால் அதுவே கோவிலில் எப்போதும் இருக்கும் பூஜாரிக்கு பாவகுவியல் இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும் அவர் மிகவும் அதிகமான காலத்தை அந்த கேவிலில் செலவிடுவதால் இயல்பாகவே அவர் புண்ணியஸ்தர் என்ற உயரந்த நிலைக்கி மாறி இருக்க வேண்டுமே அது சாத்தியமா என்ற கேள்வியே தொடுத்து இருந்தார். நான் இந்த கேள்வியே நம் ஜோதிட குடும்பத்தாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் அதாவது வாழ்கையில் ஒருவன் ஒரு ஜோதிடரை அணுகி பலன் கேட்டு நல்வழிபடுதல் என்ற முறையில் இந்த ஜோதிடகலை பிரதானமாக பேசப்படுகின்றது. அந்த கலையே கரைச்சி குடித்து அதில் வித்து போட்டவர்கள் அதை ஜோதிட தொழிலாவகவும் கொண்டவர்கள் எப்போதும் ஜோதிட ஆய்வில் காலத்தை வென்ற கிரகபெயர்ச்சிகளை துல்லியமாக கணிப்பவர்கள் தனக்கு வரும் தீங்கை நீக்கி நல்ல பலனை தேர்ந்து எடுத்து உயர்ந்த நிலைக்கி ஏன் மாற முடியவில்லை சற்று சிந்தித்து பார்தால் இந்த பூஜாரிக்கும் ஜோதிடர்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருப்பதை உணர்வீர்கள் ஆகையால் இந்த இரண்டு செய்தியேயும் மையமாக வைத்து இந்த கட்டுரையே எழுதுகின்றேன்.

கர்மா என்றால் அது இரண்டு வகை ஆதாவது காமிய கர்மா, நிஷ்காமிய கர்மா, சரி இந்த காமியகர்மா நிஷ்காமிய கர்மா என்றால் என்ன அது எங்கு இருந்து வந்தது என்ற கேள்விகள் அடுத்து வரும் அதற்கு முன் சஞ்சிதம்,பிராரப்தம்,ஆகமியம் என்ற கர்மாவின் செயல்பாட்டை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும் சஞ்சிதம் ஒரு அணுவின் அல்லது உயிரின் இயல்பு குணம்,பிராரப்தம் பலஅணுக்கள் சேர்ந்து உருவான ரூபத்தின் தன்மையே பற்றி விஷயம் இது உலக சிருஷ்டியானதன் காரணம், ஆகமியம் சிருஷ்டியின் தன்மையே மாற்ற முயற்ச்சி செய்து காலத்தின் கோலத்தில் அணுவின் உயிர் தன்மையே மாற்ற முயற்ச்சி செய்வது. இதில் ஒருவன் பிராரப்த வினையின் தன்மைக்கி தக்கவாறு இயல்பாக இருந்தால் அது நிஷ்காமிய கர்மா,அதைவிட்டு காலத்தின் கோலத்தை மாற்ற ஆகமிய வினையே தன் கையில் எடுத்தால் அது காமிய கர்மா, இதை இன்னும் தெழிவாக வரும் பதிவில் பதிகின்றேன். நம் கதைக்கி வருவோம் அதாவது ஒரு செயலை தொடங்கும் போதே அதோடு ஒன்றி மனம் ஈடுபட்டு செய்தால் அதன் வினையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்காமல் அதன் போக்கில் தொடங்கும் போதே அது நம் மனதிற்கு சந்தோஷம் என்ற செயலை கொடுத்து அதில் திருப்தியோடு சொயல் பட்டால் அதாவது வேலை தொடங்கும் போதே வினையின் பலன் கிடைத்த்தாக உணர்ந்து செயல்பட்டால் அது நிஷ்காமிய கர்மா. ஆனால் நாம் மற்றவர் பின் பற்றிய முறையே மனதில் கொண்டு இப்படி செய்தால் இதன் பலன் இப்படி கிடைக்கும் என்ற முடிவான விடையே மனதில் மையமாக கொண்டு செயல் பட்டால் அந்த கர்மா காமிய கர்மா. நிஷ்காமிய கர்மபலன் வேலை தொடங்கும் போதே கிடைத்துவிடும். காமிய கர்மா வேலை முடிந்த பிறகு பலன் தரும் என்ற எண்ணத்தில் அதன் பலனை நோக்கி செயல்படுவது. இதை பற்றி பேசினால் நீண்டு கொண்டே போகும் இருதியான நம் கட்டுரையின் முடிவை சொல்லி விடுகின்றேன்.

என் அனுபவ பூர்வமாக கண்டது கோவில் கோவில் பூஜாரி ,மற்றும் ஜோதிடம் ஜோதிடர்கள் என்பவர்கள் மின்சார பல்பு போன்றவர்கள் அவர்களுக்கு சுயமான இயக்கம் கிடையாது. அது ஒளி விட வேண்டும் என்றால் மின் இணைப்பில் சரியாக பொருத்தி தகுந்த மின்சாரம் சென்றால் அந்த பல்பின் தன்மைக்கி தக்கவாறும் மின்சாரத்தின் அழுத்த்த்திற்கு தக்கவாறும் அதன் ஒளி பிரகாசிக்கும் இதை போல் தான் கோவில், கோவில் பூஜாரி ஜோதிடம் ஜோதிடர்கள் என்பது பல்பு மாதிரி அவர்களால் சுயமாக இயங்க முடியாது அது ஒளி பொருந்திய அறிவாகவும் அருளாகவும் மாறுவது கோவிலுக்கு செல்லும் மற்றும் ஜோதிடம் ஜோதிடத்தை நாடி செல்லும்  மக்களிடம் உயிராக இருக்கும் மின்சாரம் தான் வரும் மக்களிடம் இருக்கும் மின்சாரம் தான் கோவிலின் உள் இருக்கும் கர்பகிரத்திற்குள் சென்று அந்த விக்கிரகத்தை பிரகாசிக்கின்றது அதில் அவன் அருள் என்ற ஒளியே பெருகின்றான் அதே போல் ஜோதிடரை நாடி வருபவன் அன்றைய இயற்கையோடு தன்னை ஊன்றி பணிந்து ஜோதிடன் என்ற பல்பின் மீது தன் எண்ணம் என்ற மின்சாரத்தை செலுத்தும் போது ஜோதிடன் என்ற பல்பு பிரகாசிக்கின்ற அந்த பிரகாசத்தின் தன்மைக்கு தக்கவாறு பலன் கிடைக்கின்றது. இதன் படி பார்தால் கேவிலில் இருக்கும் பூஜாரிகள் மற்றும் ஜோதிடம் கற்ற ஜோதிடன் இரண்டு போரும் பல்பு மட்டும் தான் அது மின்சாரம் கிடைக்காமல் எங்கு இருந்தாலும் அதாவது எப்போதும் கோவிலில் இருந்தாலும் சரி அதை போல் உயகில்ஜோதிட சாம்பவான் என்று மார்புதட்டி பல பட்டத்தை தன் முதுகில் தாங்கி பெரிய விளம்பரம் போட்டுகொண்டு இருந்தாலும் பல்பு பல்புதான் மக்களின் உள் இருக்கும் மின்சாரத்தை பொருத்துதான் இதன் தன்மை வெளிபடுகின்றது. ஆகையால் மக்களின் உள் இருக்கும் உண்மை என்ற மின்சாரத்தை நாம் பெற்று நாமும் பிரகாசிப்போம் அவர்களையும் பிரகாசிக்க செய்வோம். இப்போது எல்லாம் சில கோவில்கள் மற்றும் ஜோதிடர்களிடம் மக்களின் மின்சாரம் செல்லும் போது பல்பு பீஸ் ஆகி இருண்ட கண்டமாக காட்சி அழிப்பதே இந்தனை பேதமைக்கும் காரணம் எதிலும் நியதி இயம்ம் தேவை அது தவறும் போது சிலை என்ற கல்லு கல்லுதான் ஜோதிடமும் ஜோதிடரும் கூறும் கணக்கு தப்பு தப்பு தான் இந்த நிலையில் அம்மா கணக்கு ……உண்மை பெரும்.

அதிகமான தகவல் அதாவது உண்மையே தேடி நிறையவே எழுத ஆர்வம் ஆனால் காலம் இல்லாத காரணத்தால் இதை விவாதிக்காமல் இத்துடன் முடித்துக் கொள் கின்றேன் நன்றி நன்றி.

ஸமாவர்த்தனம்

ஸமாவர்த்தனம்

காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தையின் புண்ணிய கர்மாக்கள்

ஸமாவர்த்தனம்
ஒரு பிரம்மசாரி திருமணத்திற்கு முன்பாகச் சில சடங்குகளை செய்தாகவேண்டியதுண்டு. அதற்கு விரதம் என்று பொதுப்பெயர். இதுகாறும் மேற்கொண்டிருந்த ப்ரம்மசர்ய ஆசிரமத்திற்கான அனுஷ்டானத்தைக் கைவிட்டு, கிரஹஸ்த ஆசிரமதர்மத்தை மேற்கொள்ளவிருப்பதற்கு அடையாளமாகச் செய்வதாகவேண்டிய சில அனுஷ்டான முறைகளுக்கு ஸமாவர்த்தனம் என்று பெயர்.

Read more

Social Media Icons Powered by Acurax Website Redesign Experts
Visit Us On TwitterVisit Us On FacebookVisit Us On Google PlusVisit Us On YoutubeVisit Us On Linkedin
Web Design BangladeshBangladesh Online Market